“Planetary Health Check 2025” அறிக்கையானது, முதல் முறையானப் பெருங்கடல் அமில மயமாக்கல் உட்பட புவிக்கான ஒன்பது வரம்புகளில் ஏழு வரம்புகள் தற்போது மீறப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது.
மீறப்பட்ட வரம்புகள்: பருவநிலை மாற்றம், உயிர்க்கோள ஒருங்கிணைப்பு, நில அமைப்பு மாற்றம், நன்னீர் பயன்பாடு, உயிர்ப் புவி வேதியியல் செயல்பாட்டின் இயக்கங்கள், புதிய அமைப்புகள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட பெருங்கடல் அமில மயமாக்கல் ஆகியனவாகும்.
ஓசோன் சிதைவு மற்றும் தூசிப் படல அதிகரிப்பு ஆகியவை மட்டுமே பாதுகாப்பான வரம்புகளுக்குள் உள்ளன.
தொழில்துறை காலக் கட்டத்திலிருந்துப் பெருங்கடல் அமிலமயமாக்கல் 30 முதல் 40% அதிகரித்துள்ளது.