நிலக்கரிச் சுரங்க வைப்பு நிதி அமைப்பானது (CMPFC - Coal Mines Provident Fund Organisation) தகவல் தொழில்நுட்பத் திட்டமான “மேம்பட்ட புதிய தலைமுறை தகவல் மற்றும் கையாளும் முன்னெடுப்பு” (SUNIDHI - Superior New-generation Information and Data Handling Initiative) என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இது வைப்புநிதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தனது நடவடிக்கைகள் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
CMPFC என்பது நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் வைப்புடன் தொடர்புடைய காப்பீடு போன்ற பல்வேறு திட்டங்களை நிர்வகிக்கும் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.