மத்திய அரசானது வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியப் பணியாளர்களின் திறன்களைக் கணக்கிடுவதற்காக வேண்டி “SWADES” என்ற ஒரு திட்டத்தின் கீழ் திறன் மதிப்பீட்டு நடவடிக்கையை நடத்த இருக்கின்றது.
“SWADES” (Skilled Workers Arrival Database for Employment Support) என்பது வேலைவாய்ப்பு உதவிகளுக்காக வேண்டி திறனுள்ள பணியாளர்களின் வருகை குறித்த தரவுத் தளம் என்பதைக் குறிக்கின்றது.
இது இந்தியக் குடிமக்களின் அனுபவங்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்த இந்தியக் குடிமக்களின் தரவுத் தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மத்தியத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சகம், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.