இந்தியக் கடற்படை மற்றும் ரஷ்யக் கடற்படை ஆகியவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான “இந்திரா கடற்படைப் பயிற்சியின்” 4வது பதிப்பைத் தொடங்கியுள்ளன.
இந்த இருதரப்புப் பயிற்சியானது வங்காள விரிகுடாவில் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆண்டு இந்தப் பயிற்சியானது கோவிட் – 19 நோய்த் தொற்றினால் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, “கடலில் மட்டும், மற்ற எவ்வித தொடர்புகளும் அற்ற முறையில்” நடத்தப்பட இருக்கின்றது.
இது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய கடற்படைகளுக்கு இடையே நீண்ட கால உத்திசார் உறவை ஒருங்கிணைப்பதற்காக வேண்டி 2003 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.