“என்னுடைய கங்கை, என்னுடைய ஓங்கில்” (டால்பின்) பிரச்சாரம்
October 7 , 2020 1749 days 825 0
கங்கை நதி டால்பின் தின (அக்டோபர் 05) கொண்டாட்டத்தன்று நாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக “என்னுடைய கங்கை, என்னுடைய டால்பின்” என்ற பிரச்சாரமானது தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமானது தேசியத் தூய்மை கங்கைத் திட்டத்தினால் (NMCG - National Mission for Clean Ganga) 6 இடங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் (அனைத்து 3 மாநிலங்களும் கங்கை நதி பாயும் மாநிலங்களாகும்) ஆகிய மாநிலங்களில் டால்பின் தரிசனத்தை (dolphin safari) கொண்டுள்ளது.
“என்னுடைய கங்கை, என்னுடைய டால்பின்” என்ற பிரச்சாரமானது உத்தரப் பிரதேசத்தில் 250 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிஜ்னோரில் இருந்து நரோரா வரை டால்பின் கணக்கெடுப்பைத் தொடங்குவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.