‘ஜல் சக்தி மற்றும் பேரிடர் மேலாண்மை” ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற திட்டத்தின் 2 நாட்கள் நடைபெறும் ஒரு பிராந்தியக் கருத்தரங்கானது ஜம்முவில் நடத்தப் பட்டது.
இது தமிழ்நாடு அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை ஆகியவற்றினால் நடத்தப்பட்டது.
ஒரே பாரதம், உன்னத பாரதம்
இது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தின விழாவை முன்னிட்டு ஏக்தா திவாஸ் (2016 ஆம் ஆண்டு அக்டோபர் 31) அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.
இது நாட்டின் பல்வேறு பகுதிகளின் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதையும் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்களிடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்தி வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.