“KRITAGYA” (கிரிட்டாக்யா) ஹேக்கத்தான் ஆனது தேசிய வேளாண் உயர் கல்வித் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி ஆணையத்தினால் திட்டமிடப் பட்டு உள்ளது.
இது பெண்களுக்கு உகந்த கூறுகளுடன் சிறப்புக் கவனம் செலுத்துவதுடன் வேளாண் நடைமுறையை மேம்படுத்துவதற்கான சாத்தியமான தொழில்நுட்பத் தீர்வுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.