“சன் - சாதன்” ஹேக்கத்தான் – அணுகத் தக்க கழிப்பறைகள்
August 24 , 2019 2173 days 785 0
மாற்றுத் திறனாளிகளுக்கான (திவ்யாங்ஜன்) அணுகத்தக்க கழிப்பறைகளுக்காக அரசின் சமீபத்திய முன்னெடுப்பான “சன் - சாதன்” ஹேக்கத்தான் என்ற முயற்சிக்காக விண்ணப்பங்களை இந்திய அரசு வரவேற்றுள்ளது.
கழிப்பறைகளைத் திறன் வாயந்ததாக, அதிக அளவில் அணுகக் கூடியதாக மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதாக அவற்றை அமைப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை எளிமைப் படுத்துவதற்காக தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் மாதத்தில், புது தில்லியில் இரண்டு நாள் நடைபெறவிருக்கும் ஹேக்கத்தானின் போது தங்களது முன் மாதிரிகளை உருவாக்கிட பணியாற்ற விருக்கின்றார்கள்.