“சுகம்யா பாரத் செயலி” மற்றும் “புகைப்படத் தொகுப்பினை அணுகுதல்”
March 5 , 2021 1535 days 726 0
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சரான தாவர் சந்த் கெலாட் அவர்கள் “சுகம்யா பாரத் செயலி” மற்றும் “புகைப்படத் தொகுப்பினை அணுகுதல்” என்ற ஒரு கையேடு இரண்டையும் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தச் செயலி மற்றும் கையேடு இரண்டும் மாற்றுத் திறனாளிகளின் அதிகாரமளிப்புத் துறையினால் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோருக்கான அணுகல் தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பதிவு செய்ய வழிவகை செய்கின்றது.
இந்தக் கைபேசிச் செயலியானது மாற்றுத் திறனாளிகளால் எதிர்கொள்ளப்படும் கொரானா வைரஸ் தொடர்பான பிரச்சினைகளையும் களைய இருக்கின்றது.
இந்தக் கையேடானது பல்வேறு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து எடுக்கப் பட்ட புகைப்படங்களின் ஒரு தொகுப்பாகும்.
இது படங்கள் வடிவில் நல்ல மற்றும் தீய நடைமுறைகள் குறித்து எளிதில் புரிந்து கொள்ளவும் அணுகல் தொடர்பான 10 அடிப்படை அம்சங்கள் குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட பங்குதாரர்களுக்கான கூறு மற்றும் வழிகாட்டியாகவும் செயல்படுகின்றது.
இந்த செயலியானது முக்கியமான 5 அம்சங்களை அளிக்கின்றது. இதில் 4 அம்சங்கள் அணுகலை மேம்படுத்துவது தொடர்பானவையாகும். இதில் 5வது ஆக உள்ளது கொரானா வைரஸ் தொடர்பான பிரச்சினைகளுக்கான மாற்றுத் திறனாளிகளுக்காக மட்டுமே உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்.