2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிகப்படியான கோவிட்-19 தடுப்பூசிகளை “தடுப்பூசி மைத்ரி” திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்ய தொடங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
COVAXஉலகளாவிய தொகுப்பில் இந்தியாவின் பங்களிப்பினை உறுதி செய்வதற்காக இது அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பெருந்தொற்றின் 2வது அலை நாட்டில் பரவியதன் காரணமாக கோவிட்-19 தடுப்பு மருந்துகளின் ஏற்றுமதியினை இந்தியா நிறுத்தியது.
COVAX என்பது கோவிட்-19 தடுப்பூசிகளை அனைவரும் சமமான முறையில் அணுகச் செய்வதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.