வியட்நாம் போர் முடிவடைந்ததன் 50வது ஆண்டு பெரும் நிறைவைக் கொண்டாடிய வியட்நாம் நாட்டு அரசானது அதனை “நம்பிக்கையின் வெற்றி- Victory of Faith” என்று குறிப்பிட்டது.
இந்த ஆண்டு நிறைவு விழாவானது 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று அந்த நாட்டின் மறு ஒருங்கிணைப்பின் முதல் நடவடிக்கையினை நினைவு கூர்கிறது.
இந்த நாளில்தான், கம்யூனிஸ்ட்களின் கீழான வடக்கு வியட்நாம், அமெரிக்க ஆதரவு பெற்ற தெற்கின் தலைநகரான சைகோனைக் கைப்பற்றி, ஹோ சி மின் நகரம் என மறுபெயரிட்டது.
வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் 1995 ஆம் ஆண்டில் அரசுமுறை உறவுகளை இயல்பாக்கி, 2023 ஆம் ஆண்டில் அதனை மேலும் அதிகப்படுத்தின.