“பசுமை நடவடிக்கையின் TOP லிருந்து TOTAL” என்ற திட்டத்தின் கீழ் பழங்கள் மற்றும் காய்கறிகள்
September 13 , 2020 1809 days 619 0
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளும் “பசுமை நடவடிக்கையின் TOPலிருந்து TOTAL” என்ற திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட உள்ளன.
இந்த நடவடிக்கையானது பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிலிருந்து (TOP - Tomato, Onion and Potato) அடுத்த 6 மாதக் காலத்திற்கு அனைத்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகமானது இந்தத் திட்டத்தின் கீழ் போக்குவரத்துச் செலவினத்திற்கான 50% தொகையை மானியமாக அளிக்க உள்ளது.
பசுமை நடவடிக்கையானது வெண்மைப் புரட்சி என்பதின் வரிசையில் 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இது மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தைத் தளத்தின் மூலம் விவசாயிகளை நுகர்வோருடன் இணைப்பதன் மூலம் TOP வகை காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதின் மீது கவனம் செலுத்துகின்றது.