“மிலன்” – பன்னாட்டு கடற்படைப் பயிற்சி
February 26 , 2022
1272 days
578
- மிலன் என்பது இந்தியக் கடற்படையினால் நடத்தப்படும் பன்னாட்டுக் கடற் படைப் பயிற்சியின் பெயராகும்.
- இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படும் பயிற்சியாகும்.
- இந்தப் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- அனைத்து வகையான மிலன் பயிற்சிகளும் அந்தமான் மற்றும் நிகோபர் படைப் பிரிவின் தலைமையில் அந்தமான் & நிகோபர் தீவில் நடைபெற்றன.
- இந்த ஆண்டின் மிலன் பயிற்சியானது முதல்முறையாக விசாகப்பட்டினத்தில் நடத்தப் பட உள்ளது.
- இந்த ஆண்டிற்கான இந்தப் பயிற்சியின் கருத்துரு, “Camaraderic – cohesion – collaboration” என்பதாகும்.

Post Views:
578