“வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் தொலைநோக்குகள் 2025” அறிக்கை
April 24 , 2025 72 days 143 0
“வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் தொலைநோக்குகள் 2025 – நெருக்கடிச் சூழலின் கீழ்: நிச்சயமற்ற ஒரு தன்மையானது உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகளை மறு வடிவமைக்கிறது” என்ற தலைப்பிலான அறிக்கையாகும்.
இது ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (UNCTAD) வெளியிடப்பட்டது.
உலக அளவிலான வளர்ச்சியானது, வெறும் 2.3 சதவீதமாகக் குறையும் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது.
குறைவான வருமானம் கொண்ட சுமார் 68 நாடுகளுள், 35 நாடுகள் ஆனது கடன் நெருக்கடியில் உள்ளன அல்லது கடன் நெருக்கடி நிலையை எட்டும் ஒரு நிலைமையில் உள்ளன.
அதிக அரசாங்கச் செலவினம் மற்றும் பணவியல் கொள்கைகளின் தூண்டுதலுடன் வளர்ச்சியைத் தூண்டும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
தெற்கு-தெற்கு (வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையிலான) வர்த்தகமானது, தற்போது உலகளாவிய வர்த்தகத்தில் ~1/3 பங்கினைக் கொண்டுள்ளது.
சீனாவின் மீதான வளர்ச்சி விகிதமானது சுமார் 4.4 சதவீதமாக இருக்கும் என்று இந்த அறிக்கை கணித்துள்ள அதே நேரத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் ஆனது 1 சதவீதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.