TNPSC Thervupettagam

“வாய்ப்புக் குறியீடு – 2021” அறிக்கை

March 5 , 2021 1535 days 635 0
  • இந்த அறிக்கையானது மக்கள் எவ்வாறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் அதை அடைவதற்கான வழியில் ஏற்படும் தடங்கல்கள் குறித்து மக்கள் புரிந்து கொள்ளவும் வழிவகை செய்கின்றது.
  • இந்த ஆண்டின் அறிக்கையானது பெண்கள் எவ்வாறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் நோய்த் தொற்றுக் காலம், இந்தியாவில் பணியாற்றும் பெண்களுக்கான எதிர்காலச் செயல்பாடுகளைப் பாலின இடைவெளி எவ்வாறு குறைக்கின்றது என்பது குறித்தும் புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றது.
  • இந்த அறிக்கையானது “LinkedIn” என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதாகும்.
  • இந்த ஆய்வானது ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப் பட்டதாகும்.
  • இது ஆசியா-பசிபிக் பகுதி (APAC - Asia Pacific) முழுவதும் 10,000ற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.
  • இதில் இந்தியாவில் இருந்து 2,285 நபர்கள் பங்கு பெற்றனர்.

முக்கிய அம்சங்கள்

  • 10ல் 9 பெண்கள் அல்லது 89% பெண்கள் கொரானா வைரஸ் நோய்த் தொற்றினால் எதிர்மறைத் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
  • இந்தியாவில் 85 சதவிகிதத்திற்கும் மேல் அல்லது 5ல் 4 பெண்கள் பாலினத்தின் காரணமாக வளர்ச்சி, பதவி உயர்வு அல்லது பணிச் சலுகை ஆகியவற்றைப் பெறாமல் உள்ளனர்.
  • இந்தச் சராசரியானது APAC பகுதிகளுக்கு 60% ஆக உள்ளது.
  • APAC பகுதியுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் உள்ள அதிகமான பெண்கள் எதிர்கால வாழ்க்கை மேம்பாடு குறித்து பாலினத்தின் தாக்கத்தை அதிக அளவில் சந்தித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்