“ஸ்வமித்வா” (SVAMITVA) திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள்
October 15 , 2020 1755 days 2655 0
இந்தியப் பிரதமர் அவர்கள் “SVAMITVA” என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளின் நேரடி விநியோகத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
“SVAMITVA” என்பது கிராமப்புறப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களின் கள ஆய்வு மற்றும் வரைபடமிடல் என்பதைக் குறிக்கின்றது.
இது கடன் வாங்குவதற்காக அல்லதுஇதர நிதியியல் பயன்பாடுகளுக்காக வேண்டி கிராமப் புறத்தினரால் சொத்துக்களை நிதியியல் சொத்தாகப் பயன்படுத்த வழிவகை செய்கின்றது.
இது நிலச் சொத்து மீதான பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவ இருக்கின்றது.
“SVAMITVA” திட்டம்
“SVAMITVA” (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டமானது மத்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு மத்திய அரசுத் துறைத் திட்டமாகும்.
இது தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமான 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இது கிராமப்புறப் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு “உரிமை ஆவணங்களை” வழங்குவதையும் சொத்து அட்டைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.