TNPSC Thervupettagam

TP Quiz - September 2025 (Part 1)

181 user(s) have taken this test. Did you?

1. When was the Government e-Marketplace (GeM) launched?

  • 2014
  • 2015
  • 2016
  • 2017
அரசு இணைய வழிச் சந்தை (GeM) எந்த ஆண்டில் தொடங்கப் பட்டது?

  • 2014
  • 2015
  • 2016
  • 2017

Select Answer : a. b. c. d.

2. The Maitree military exercise is conducted between

  • India and Myanmar
  • India and Thailand
  • India and Sri Lanka
  • India and Nepal
மைத்ரீ இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?

  • இந்தியா மற்றும் மியான்மர்
  • இந்தியா மற்றும் தாய்லாந்து
  • இந்தியா மற்றும் இலங்கை
  • இந்தியா மற்றும் நேபாளம்

Select Answer : a. b. c. d.

3. Who among the following received the National Teacher Award 2025 from Tamil Nadu?

  • Revathy Parameswaran and Vijayalakshmi
  • Lakshmi Narayanan and Deepa Rani
  • Anitha Suresh and Kavitha Murugan
  • Meena Rajendran and Bhavani Selvam
பின்வருபவர்களில் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதைப் பெற்றத் தமிழர்கள் யாவர்?

  • ரேவதி பரமேஸ்வரன் மற்றும் விஜயலட்சுமி
  • இலட்சுமி நாராயணன் மற்றும் தீபா இராணி
  • அனிதா சுரேஷ் மற்றும் கவிதா முருகன்
  • மீனா இராஜேந்திரன் மற்றும் பவானி செல்வம்

Select Answer : a. b. c. d.

4. Which Indian weightlifter won a gold medal at the 2025 Commonwealth Weightlifting Championships?

  • Sanjita Chanu
  • Bindyarani Devi
  • Mirabai Chanu
  • Jeremy Lalrinnunga
2025 ஆம் ஆண்டு காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை யார்?

  • சஞ்சிதா சானு
  • பிந்தியாராணி தேவி
  • மீராபாய் சானு
  • ஜெர்மி லால்ரின்னுங்கா

Select Answer : a. b. c. d.

5. The 16th-century Vrindavani Vastra belongs to 

  • Assam
  • Kashmir
  • Mysore
  • Banaras
16 ஆம் நூற்றாண்டின் பிருந்தாவாணி வஸ்திரம் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தது?

  • அசாம்
  • காஷ்மீர்
  • மைசூரு
  • பனாரசு

Select Answer : a. b. c. d.

6. Choose the incorrect statement regarding Tamil Nadu government initiatives.

  • CM Stalin announced a free breakfast program for students from Class I to V in May 2022.
  • The first phase of the free breakfast program was launched in Madurai in September 2022.
  • Tamil Nadu was the first large state in India to provide HPV vaccination to all girls aged 14 to prevent cervical cancer.
  • Amma Unavagam was launched by J. Jayalalithaa on February 19, 2014.
தமிழ்நாடு அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்த தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • முதல்வர் ஸ்டாலின், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தினை 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிவித்தார்.
  • இலவச காலை உணவுத் திட்டத்தின் முதல் கட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மதுரையில் தொடங்கப்பட்டது.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசி வழங்கிய இந்தியாவின் முதல் பெரிய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • அம்மா உணவகமானது 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதியன்று J. ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது.

Select Answer : a. b. c. d.

7. What is India's Rank in the Global Innovation Index (GII) in 2024?  

  • 48th rank
  • 41st rank
  • 39th rank
  • 35th rank
2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் புத்தாக்கக் குறியீட்டில் (GII) இந்தியாவின் தர வரிசை யாது?

  • 48வது இடம்
  • 41வது இடம்
  • 39வது இடம்
  • 35வது இடம்

Select Answer : a. b. c. d.

8. Who has been appointed as the vice president of the New Development Bank (NDB)?

  • Dr Rajiv Ranjan
  • Dr Arvind Kumar
  • Dr Suresh Patil
  • Dr Manish Sharma
புதிய மேம்பாட்டு வங்கியின் (NDB) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • டாக்டர் இராஜீவ் இரஞ்சன்
  • டாக்டர் அரவிந்த் குமார்
  • டாக்டர் சுரேஷ் பாட்டீல்
  • டாக்டர் மணீஷ் சர்மா

Select Answer : a. b. c. d.

9. Choose the incorrect statement regarding Tamil Nadu’s industrial statistics as per the Annual Survey of Industries 2023–2024.

  • Tamil Nadu topped the country in the number of factories.
  • Tamil Nadu accounted for 15.24% of the total factory employment in India.
  • Tamil Nadu ranked first in Fixed Capital with a share of 8.09%.
  • Tamil Nadu was ranked third in Gross Value Added with a contribution of 10.26%.
2023–2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் தொழில்துறை புள்ளி விவரங்கள் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு 15.24% பங்களிக்கிறது.
  • நிலையான மூலதனத்தில் 8.09% பங்களிப்போடுத் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • மொத்த மதிப்புக் கூட்டலில் தமிழ்நாடு 10.26% பங்களிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Select Answer : a. b. c. d.

10. Who has been appointed as Executive Director at the IMF from India?

  • Raghuram Rajan
  • Urjit Patel
  • Shaktikanta Das
  • Gita Gopinath
சர்வதேச நாணய நிதியத்தில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட இந்தியர் யார்?

  • இரகுராம் ராஜன்
  • உர்ஜித் படேல்
  • சக்தி காந்த தாஸ்
  • கீதா கோபிநாத்

Select Answer : a. b. c. d.

11. Who has been appointed as the first chairman of the Tamil Nadu State Fire Commission?

  • J.K. Tripathi
  • T.K. Rajendran
  • Shankar Jiwal
  • Sylendra Babu
தமிழ்நாடு மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப் பட்டவர் யார்?

  • J.K. திரிபாதி
  • T.K. இராஜேந்திரன்
  • ஷங்கர் ஜிவால்
  • சைலேந்திர பாபு

Select Answer : a. b. c. d.

12. From which date will the new GST slabs of 5% and 18% come into force?

  • September 22
  • October 01
  • Octobers 02
  • October 20
5% மற்றும் 18% என்ற புதிய சரக்கு மற்றும் சேவை வரி வீதங்கள் எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளன?

  • செப்டம்பர் 22
  • அக்டோபர் 01
  • அக்டோபர் 02
  • அக்டோபர் 20

Select Answer : a. b. c. d.

13. Which of the following cities is NOT among the safest cities for women, according to the NARI report?

  • Visakhapatnam
  • Aizawl
  • Gangtok
  • Jaipur
NARI அறிக்கையின்படி, பின்வரும் நகரங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களாக தரவரிசைப்படுத்தப்படாதது எது?

  • விசாகப்பட்டினம்
  • ஐஸ்வால்
  • காங்டாக்
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

14. Choose the correct statement regarding industrial performance across Indian states.

  • The top five states in terms of total employment were Tamil Nadu, Gujarat, Maharashtra, Uttar Pradesh, and Karnataka.
  • The top five states by number of factories were Tamil Nadu, Gujarat, Maharashtra, Uttar Pradesh, and Andhra Pradesh.
  • The top five states by fixed capital were Gujarat, Maharashtra, Tamil Nadu, Odisha, and Karnataka.
  • All statements are correct.
இந்திய மாநிலங்களில் தொழில்துறை செயல்திறன் குறித்த சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மொத்த வேலைவாய்ப்பின் அடிப்படையில் முதல் ஐந்து இடத்தில் உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியனவாகும்.
  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியனவாகும்.
  • நிலையான மூலதனத்தின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகியனவாகும்.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

15. Which of the following statements is true about Glanders?

  • It is a viral disease.
  • It is exclusively a human disease.
  • It is highly contagious among equines.
  • It only spreads through the air.
கிளாண்டர்ஸ் பாதிப்பு பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது உண்மை?

  • இது ஒரு வைரஸ் நோய் ஆகும்.
  • இது பிரத்தியேகமாக மனிதர்களைப் பாதிக்கும் நோய் ஆகும்.
  • இது குதிரைகளிடையே அதிகம் பரவும் தொற்றுநோயாகும்.
  • இது காற்று வழியாக மட்டுமே பரவுகிறது.

Select Answer : a. b. c. d.

16. How many women judges are currently serving in the Supreme Court of India?

  • One
  • Three
  • Five
  • Seven
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றி வரும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை யாது?

  • ஒன்று
  • மூன்று
  • ஐந்து
  • ஏழு

Select Answer : a. b. c. d.

17. Choose the incorrectly matched pair related to international days.

  • August 12 – International Youth Day
  • August 05 – World Environment Day
  • August 19 - World Humanitarian Day
  • August 29 – National Sports Day
சர்வதேச நாட்களுடன் தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • ஆகஸ்ட் 12 - சர்வதேச இளையோர் தினம்
  • ஆகஸ்ட் 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
  • ஆகஸ்ட் 19 - உலக மனிதாபிமான தினம்
  • ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டுத் தினம்

Select Answer : a. b. c. d.

18. Nuakhai festival is celebrated in?

  • Bihar
  • Odisha
  • West Bengal
  • Assam
நௌகாய் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • பீகார்
  • ஒடிசா
  • மேற்கு வங்காளம்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

19. Which beach became Tamil Nadu's first Blue Flag-certified beach?

  • Marina Beach
  • Elliot’s Beach
  • Kovalam Beach
  • Mahabalipuram Beach
நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் கடற்கரை எது?

  • மெரினா கடற்கரை
  • எலியட்ஸ் கடற்கரை
  • கோவளம் கடற்கரை
  • மகாபலிபுரம் கடற்கரை

Select Answer : a. b. c. d.

20. Which organisation launched Project Aarohan to support the educational aspirations of toll plaza employees’ children?

  • Ministry of Education
  • National Highways Authority of India (NHAI)
  • Indian Road Transport Corporation (IRTC)
  • Ministry of Labour and Employment
சுங்கச்சாவடி ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி சார் விருப்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஆரோஹன் திட்டத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?

  • கல்வி அமைச்சகம்
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
  • இந்திய சாலைப் போக்குவரத்துக் கழகம் (IRTC)
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

21. What is the current IUCN Red List status of the vaquita porpoise?

  • Endangered
  • Vulnerable
  • Extinct in the Wild
  • Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் வாக்யூடா போர்போயிஸ் இனத்தின் தற்போதையப் பாதுகாப்பு நிலை யாது?

  • அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • வனங்களில் அழிந்து விட்ட இனம்
  • மிக அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

22. Which Indian act allows the declaration of Biodiversity Heritage Sites?

  • Environment Protection Act, 1986
  • Wildlife Protection Act, 1972
  • Biological Diversity Act, 2002
  • Forest Rights Act, 2006
பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாரம்பரியத் தளங்களை அறிவிக்க அனுமதிக்கின்ற இந்தியச் சட்டம் எது?

  • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986
  • வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972
  • உயிரியல் பல்லுயிர்ப் பெருக்கச் சட்டம், 2002
  • வன உரிமைச் சட்டம், 2006

Select Answer : a. b. c. d.

23. Which organisation won the Ramon Magsaysay Award in 2025?

  • Teach For India
  • Educate Girls
  • Pratham
  • Akshaya Patra
2025 ஆம் ஆண்டில் ரமோன் மகசேசே விருதை வென்ற அமைப்பு எது?

  • Teach For India
  • Educate Girls
  • Pratham
  • Akshaya Patra

Select Answer : a. b. c. d.

24. The 15th India-Japan Annual Summit was held in

  • Tokyo
  • Kyoto
  • New Delhi
  • Gurugram
இந்தியா-ஜப்பான் இடையிலான 15வது வருடாந்திர உச்சி மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • டோக்கியோ
  • கியோட்டோ
  • புது டெல்லி
  • குருகிராம்

Select Answer : a. b. c. d.

25. Choose the incorrect statement regarding women's employment in India 2023–24.

  • Women’s employment rate increased to 40.3%, nearly double the 22% in 2017–18.
  • Rural female employment rose by 96%, while urban female employment grew by 43%.
  • Female unemployment rate rose from 3.2% in 2017–18 to 5.6% in 2023–24.
  • All statements are correct.
இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 2017–18 ஆம் ஆண்டில் 22% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் ஆனது கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து 40.3% ஆக அதிகரித்துள்ளது.
  • கிராமப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பு 96% அதிகரித்துள்ள அதே நேரத்தில் நகர்ப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பு 43% அதிகரித்துள்ளது.
  • 2017–18 ஆம் ஆண்டில் 3.2% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023–24 ஆம் ஆண்டில் 5.6% ஆக உயர்ந்துள்ளது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.