TNPSC Thervupettagam

அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

May 6 , 2026 5 days 48 0
  • 2026 ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களில் 102 இடங்களை வென்று, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
  • பாரதிய ஜனதா கட்சி 82 இடங்களை வென்றதுடன் அசோம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி தலா 10 இடங்களை வென்று, பெரும்பான்மைக்குத் தேவையான 64 இடங்களை எளிதாகக் கடந்தன.
  • இந்திய தேசிய காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே பெற்ற அதே சமயம் ரைஜோர் தள கட்சி 1 இடத்தை மட்டுமே வென்றதுடன், இது எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஒரு பெரிய பின்னடைவைக் குறிக்கிறது.
  • அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 126 தொகுதிகள் மற்றும் 35 மாவட்டங்களில் சுமார் 2.5 கோடி வாக்காளர்கள் மற்றும் 722 வேட்பாளர்களை உள்ளடக்கிய தேர்தலில் அசாம் 85.9 சதவீத வாக்குப்பதிவைப் பதிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்