அசாம் சட்டமன்றம் ஆனது 2025 ஆம் ஆண்டு பலதார திருமணத் தடை மசோதாவினை தாக்கல் செய்தது.
இந்த மசோதா பலதார மணத்தை ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பதோடுமேலும் ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகின்ற மற்றும் அபராதத்துடன் கூடிய குற்றமாக்குகிறது.
மீண்டும் மீண்டும் குற்றமிழைக்கும் குற்றவாளிகளுக்கு இந்தத் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும்.
இந்தச் சட்டம் அசாமில் வசிப்பவர்கள், அசாமிற்கு வெளியே திருமணம் செய்பவர்கள் மற்றும் அந்த மாநிலத்தில் சொத்து அல்லது சலுகைகளைக் கொண்டுள்ள குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்குப் பொருந்தும்.
அரசியலமைப்பின் 342வது சரத்தின் கீழ் ஆறாவது அட்டவணை பகுதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு இந்த மசோதா விலக்கு அளிக்கிறது.
பலதார மணத்தில் பங்கேற்கும் பாதிரியார்கள், கிராமத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் 1.5 லட்சம் ரூபாய் வரை அபராதத்துடன் தண்டிக்கப் படுவர்.