TNPSC Thervupettagam

விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு மசோதா, 2025

December 1 , 2025 11 days 44 0
  • 2025 ஆம் ஆண்டு விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு மசோதா (அசாம் திருத்தம்) மசோதாவினை அசாம் சட்டமன்றம் அங்கீகரித்தது.
  • இந்த மசோதா, உள் மாநில அளவில் மோஹ் ஜூஜ் என்று அழைக்கப்படும் பாரம்பரிய எருமைச் சண்டைக்கு, 1960 ஆம் ஆண்டு விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கிறது.
  • எருமைச் சண்டைகள் அசாமில் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடைபெறும் மாக் பிஹு திருவிழாவின் ஒரு பகுதியாகும்.
  • மோஹ் ஜூஜ் ஒரு கலாச்சாரப் பாரம்பரியம் என்றும் அது பூர்வீக எருமை இனங்களைப் பாதுகாக்க உதவுகிறது என்றும் அரசாங்கம் கூறியது.
  • அசாமின் இந்தத் திருத்தம், ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டிப் பந்தயம் போன்ற கலாச்சார நடைமுறைகளுக்கு என தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள விலக்குகளைப் போன்றதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்