உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் அனைத்துத் துறைகளுக்கும் பிறப்புச் சான்றாக ஆதாரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளன.
ஆதார் (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் - UIDAI அடையாள அட்டை) எந்த அதிகாரப் பூர்வ பிறப்புப் பதிவையும் கொண்டிருக்காததால் அது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் (திருத்தம்) சட்டம், 2023 என்பது பிறப்பு விவரங்களை அங்கீகரிக்கப் பட்ட அரசுப் பதிவாளர்கள் மூலம் மட்டுமே சரி பார்க்க வேண்டும் என்று கோருகிறது.
மருத்துவமனை பிறப்புப் பதிவுகள், பள்ளிச் சேர்க்கைப் பதிவுகள் மற்றும் தடுப்பூசி அட்டைகள் போன்ற ஆவணங்களைச் சரி பார்க்கும் 16 அம்ச சரிபார்ப்பு செயல்முறையை மகாராஷ்டிரா தொடங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஆதாரை மட்டும் பயன்படுத்தி வழங்கப் பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ரத்து செய்யப் படலாம்.
பிறந்த தேதிக்கான சான்றாக அல்லாமல் வாக்காளர் பட்டியல்களுக்கான அடையாளச் சான்றாக மட்டுமே ஆதாரை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.