2026 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த ஒரு பாம்ப்பார்டியர் லியர்ஜெட் 45 விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார்.
1991ல், முதன்முதலில் பாராமதி தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எட்டு முறை அத்தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தினார்.
2023 ஆம் ஆண்டில், அவர் பாஜக தலைமையிலான கூட்டணியுடன் இணைவதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (NCP) ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
பிப்ரவரி 2024ல், இந்தியத் தேர்தல் ஆணையம் அஜித் பவாரின் பிரிவை அதிகாரப்பூர்வ தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்தது.
அதே ஆண்டில், அவர் ஆறாவது முறையாக மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.