இமாச்சலப் பிரதேச மாநில முதல்வரான ஜெய் ராம் தாக்கூர் அவர்கள் “அடல் சுரங்கப் பாதையானது” 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் திறக்கப் படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த சுரங்கப் பாதையானது லேஹ்-மணாலி நெடுஞ்சாலையில் இருக்கும் பீர்பாஞ்சல் மலை வரம்பில் உள்ள ரோஹ்டாங் கணவாயின் கீழ் கட்டப்பட்டு வருகின்றது.
இது கடல் மட்டத்திலிருந்து 3100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த சுரங்கப் பாதையின் நீளம் 8.8 கிலோ மீட்டராகும்.
இந்த வழித்தடமானது சியாச்சின் பனிப் பாறை மற்றும் அக்சய் சின் ஆகியவற்றில் அமைந்துள்ள துணை இராணுவப் படைப் பிரிவுகளுக்கு இராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கியமான பாதையாக விளங்குகின்றது.
இந்த சுரங்கப் பாதைக்கான பரிந்துரையானது 1860 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இது முதன்முறையாக மொராவியன் திட்டத்தினால் பரிந்துரைக்கப் பட்டது.