TNPSC Thervupettagam

எல்லைப் பகுதிகளில் NCC ஈடுபடுத்தப்படல்

August 20 , 2020 1832 days 674 0
  • தேசிய மாணவர் படையானது (NCC - National Cadet Corps) 173 எல்லைப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
  • NCC ஈடுபடுத்தப்படுவதன் மூலம் எல்லைப் பகுதியானது பேரிடர் மேலாண்மைக்காக வேண்டி பயிற்சி பெற்ற மனித சக்தியைப் பெற இருக்கின்றது.
  • மேலும், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஆயுதப் படையில் தங்களது வாழ்நாழ் தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக திறன் பயிற்சிகளைப் பெற உள்ளனர்.
  • மேலும் NCC படையினர் போரிலும் ஈடுபடுவர்.
  • 1971 ஆம் ஆண்டில் வங்கதேச-பாகிஸ்தான் போரின் போதும் 1965 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் இவர்கள் அதில் ஈடுபட்டனர்.
  • 74வது சுதந்திர தினக் கொண்டாட்ட உரையின் போது பிரதமர் அவர்கள் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த 1 இலட்சம் NCC வீரர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவர் என்று அறிவித்து இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்