மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகமானது “சுவஸ்தியா” என்ற பழங்குடியின சுகாதார மற்றும் ஊட்டச்சத்துத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
இதே வகையைச் சேர்ந்த முதலாவது தளம் இதுவாகும்.
இது இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை தொடர்பான தகவல்களை அளிக்கின்றது.
மேலும், இந்த அமைச்சகமானது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துத் தொடர்பான “அலேக்” என்ற ஒரு மின்னணு-செய்தி மடலையும் தொடங்கியுள்ளது.
இது காலாண்டு அடிப்படையில் வெளியிடப்பட உள்ளது. மேலும் இது பழங்குடியினரின் சுகாதாரம் மற்றும் அவர்களின் ஊட்டச்சத்தில் பங்கு கொள்ளும் பல்வேறு பங்குதார்களின் பணிகளை எடுத்துக் காட்டுகின்றது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை 104 மில்லியன் ஆகும்.