அடிப்படை கால்நடைப் பராமரிப்பு குறித்தப் புள்ளி விவரங்கள் 2025
November 30 , 2025 5 days 52 0
தேசியப் பால் தினமான 2025 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று மீன்வளம், கால் நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு அடிப்படை கால்நடைப் பராமரிப்பு குறித்த புள்ளி விவரங்கள் (BAHS) அறிக்கையை வெளியிட்டது.
2024–25 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பினை (ISS) அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கையானது, பால், முட்டை, இறைச்சி, கம்பளி, கால்நடை எண்ணிக்கை மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு பற்றியத் தரவுகளை வழங்குகிறது.
247.87 மில்லியன் டன் பால் உற்பத்தியுடன், உலகளாவியப் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
மேலும், இந்தியாவில் தனி நபருக்குப் பால் கிடைக்கும் விகிதம் (2014-15 ஆம் ஆண்டில்) ஒரு நாளைக்கு 319 கிராமிலிருந்து (கிராம்) சுமார் 485 கிராமாக (2024-25 ஆம் ஆண்டில்) அதிகரித்துள்ளது.
பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியனவாகும்.
முட்டை உற்பத்தி 149.11 பில்லியனை எட்டியதுடன், இந்தியா இதில் உலகளவில் 2வது இடத்தில் உள்ளது.
முட்டை உற்பத்தியில் முதல் 5 மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் 18.37% பங்கைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (15.63%), தெலுங்கானா (12.98%), மேற்கு வங்காளம் (10.72%), மற்றும் கர்நாடகா (6.67%).
10.50 மில்லியன் டன்கள் அளவிலான இறைச்சி உற்பத்தியுடன் இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.
இறைச்சி உற்பத்தியில் முதல் 5 மாநிலங்கள்: மேற்கு வங்கம் 12.46% பங்கைக் கொண்டு உள்ளது, அதைத் தொடர்ந்து உ.பி. (12.20%), மகாராஷ்டிரா (11.57%), ஆந்திரா (10.84%) மற்றும் தெலுங்கானா (10.49%).
கம்பளி உற்பத்தி 34.57 மில்லியன் கிலோ ஆக உள்ளது.
கம்பளி உற்பத்தியில் முதல் 5 மாநிலங்கள்: ராஜஸ்தான் 47.85% பங்கைக் கொண்டு உள்ளது, அதைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் (22.88%), குஜராத் (6.22%), மகாராஷ்டிரா (4.75%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4.30%).
இந்தப் புள்ளி விவரங்கள் இந்தியாவின் கால்நடை மற்றும் பால் துறையில் கொள்கை வகுத்தல், ஆராய்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கின்றன.