பிரதம மந்திரி தலைமையிலான உயர் மட்டக் குழுவானது தற்போது தகவல் ஆணையராகப் பணியாற்றி வரும் முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலாளரான பிமல் ஜூல்கா என்பவரை மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக (Chief Information Commissioner - CIC) பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் தேர்வு செய்து உள்ளது.
இந்தத் தேர்வுக் குழுவானது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் (பொதுவாக மத்திய உள்துறை அமைச்சர்) ஆகியோரைக் கொண்டிருக்கும்.
கடைசி CIC ஆகப் பதவி வகித்தவர் சுதிர் பார்கவா ஆவார்.