TNPSC Thervupettagam

தேசிய நிலத்தடி நீர் மேலாண்மை மேம்பாட்டுத் திட்டம்

February 22 , 2020 1903 days 637 0
  • நிலத்தடி நீர் நிறுவனங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசியத் திட்டத்தை ஆதரிப்பதற்காக உலக வங்கியும் இந்திய அரசும் இணைந்து கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • தேசிய நிலத்தடி நீர் மேலாண்மை மேம்பாட்டுத் திட்டமானது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் உலக வங்கியானது நிலத்தடி நீரை நீடித்த முறையில் நிர்வகிப்பதற்காக ரூ. 6,000 கோடியை வழங்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்