பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவின் (Pradhan Mantri Fasal Bima yojana - PMFBY) நான்காவது தேசிய மாநாடானது ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடைபெற்றது.
இந்த மாநாடானது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டில் 140க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நபார்டு (தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி), ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.