பிரதமர் மோடி ஜங்கம்வாடி மடத்திற்குச் சென்று, 19 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீ சித்தாந்த சிகாமணி கிரந்த்’ என்ற பதிப்பை வெளியிட்டுள்ளார்.
இவர் ‘ஸ்ரீ சித்தாந்த சிகாமணி கிரந்த்’ என்ற கைபேசிச் செயலியையும் தொடங்கி உள்ளார்.
இவர் தீன்தயாள் உபாத்யாயா குறித்த நினைவுச் சின்னத்தைத் தேசத்திற்கு அர்ப்பணித்தார். மேலும் இவர் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (Rashtriya Swayam sewak Sangh - RSS) சிந்தனையாளரான தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையையும் திறந்து வைத்தார்.
இவர் பின்வரும் திட்டங்கள் உட்பட 36 வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அவையாவன:
430 படுக்கைகள் கொண்ட உயர்தரச் சிகிச்சையளிக்கும் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும்
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் (Banaras Hindu University - BHU) 74 படுக்கைகள் கொண்ட மனநல மருத்துவமனை.
இந்த உயர்தர சிகிச்சையளிக்கும் சிறப்பு அரசு மருத்துவமனையானது ஏழு அண்டை மாநிலங்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 200 மில்லியன் மக்களுக்கு சேவை செய்ய இருக்கின்றது.
காசி மகாகல் விரைவு ரயில் எனப் பெயரிடப்பட்ட இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயிலையும் இவர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்த ரயிலானது வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் ஓம்காரேஷ்வர் ஆகியவற்றின் மூன்று "ஜோதிர்லிங்க யாத்ரீக மையங்களை" இணைக்க இருக்கின்றது.