மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் கீழ் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர்
February 22 , 2020 1903 days 659 0
லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஒன்றியப் பிரதேசங்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் (Central Administrative Tribunal - CAT) கீழ் கொண்டு வரப்பட உள்ளன.
இந்த அறிவிப்பானது புது தில்லியில் நடைபெற்ற இந்தத் தீர்ப்பாயத்தின் வருடாந்திர மாநாட்டில் வெளியிடப் பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்திற்கு பிரத்தியேகமாக ஒரு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கும் வரை, சண்டிகர் தீர்ப்பாய அமர்வானது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களுக்கு தீர்ப்பாயமாகச் செயல்பட இருக்கின்றது.
CATன் கூறுகள்
இது பொதுப் பணிகளுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்தல் (ஆட்சேர்ப்பு) அல்லது அந்த நபர்களின் பணி தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றது.
CATன் விதிகள் பிரிவு 323 - Aல் சேர்க்கப்பட்டுள்ளன.
CATன் விதிகளானது ஆயுதப் படைகள், உச்ச நீதிமன்ற ஊழியர்கள், துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் செயலகங்களின் பணியாளர்கள் ஆகியோருக்குப் பொருந்தாது.