TNPSC Thervupettagam

பெண் ராணுவ அதிகாரிகள் நிரந்தர ஆணையத்திற்கு தகுதியானவர்கள் – இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

February 22 , 2020 1903 days 477 0
  • சமீபத்தில், ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றமானது ஆண் ராணுவ அதிகாரிகளுக்கு இணையாக பெண் ராணுவ அதிகாரிகளுக்கும் நிரந்தர ஆணையத்தை வழங்க வேண்டும் என்ற 2010 ஆம் ஆண்டின் தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளது.
  • பெண் ராணுவ அதிகாரிகள் போர் அல்லாத பகுதிகளில் கட்டுப்பாட்டகப் பதவிகளுக்குத் தகுதி உடையவர்களாவர்.
  • பெண் அதிகாரிகள் தங்களது ஆண் சகாக்களைப் போன்றே தகுதியின் அடிப்படையில் கர்னல் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிக்கு உயர முடியும்.
  • இந்தத் தீர்ப்பானது இந்திய அரசியலமைப்பில் சமத்துவத்திற்கான உரிமையை உறுதி செய்துள்ளது.

பின்னணி:

  • இராணுவத்தில் பெண் அதிகாரிகளைச் சேர்த்தலானது 1992 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • பெண்கள் சிறப்பு நுழைவுத் திட்டத்தின் (WSES - Women Special Entry Scheme) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் (துறைகளில்) பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
  • 2006 ஆம் ஆண்டில், WSES ஆனது குறுகிய காலப் பணி ஆணையத் திட்டத்தால் (SSC - Short Service Commission) மாற்றப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 10 ஆண்டுகள் வரை இராணுவத்தில் நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு 14 (10 + 4) ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு வழங்க முடியும்.
  • எனவே, பெண் அதிகாரிகள் எந்தவொரு கட்டுப்பாட்டக நியமனத்திலும் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். மேலும் ஒரு அதிகாரியாக 20 ஆண்டுகள் சேவை செய்த பின்னர் மட்டுமே தொடங்கும் அரசு ஓய்வூதியத்திற்கு இவர்களால் தகுதி பெற முடியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்