2020 ஆம் ஆண்டின் முழு ஹஜ் செயல்முறையையும் 100% டிஜிட்டல்மயமாக்கிய உலகின் முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகமானது அண்மையில் அறிவித்து உள்ளது.
இ - மாசிஹா என்பது “வெளிநாட்டிலுள்ள இந்திய யாத்ரீகர்களுக்கான (புனிதப் பயணிகள்) மின் - மருத்துவ உதவி முறையை” குறிக்கின்றது.
மெக்கா - மெதீனாவில் எந்தவொரு அவசரநிலையையும் சமாளிப்பதற்காக யாத்ரீகர்களின் முழுமையான ஒரு சுகாதாரத் தரவுத்தளத்தை உருவாக்கி, அவற்றைப் பராமரிப்பதற்கான ஒரு ஆன்லைன் (நிகழ்நேர) அமைப்பு இதுவாகும்.