TNPSC Thervupettagam

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் மாநாடு – 2020

February 21 , 2020 1907 days 584 0
  • மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் வருடாந்திர அகில இந்திய மாநாடானது புது தில்லியின் விக்யான் பவனில் நடத்தப் பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 323 - Aன் கீழ் 1985 ஆம் ஆண்டு நிர்வாகத் தீர்ப்பாயங்கள் சட்டத்தினால் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயமானது நிறுவப் பட்டுள்ளது.
  • இந்தத் தீர்ப்பாயமானது ஒரு தலைவரையும் 65 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. அவர்கள் பின்வருமாறு நியமிக்கப் படுகின்றனர்.
    • நீதித் துறையிலிருந்து 33 (தலைவர் உட்பட) நபர்கள் மற்றும் நிர்வாகத்  துறையிலிருந்து 33 நபர்கள்.
  • இதன் தலைவர் பொதுவாக உயர் நீதிமன்றத்தின் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியாக இருப்பார்.
  • உயர்நீதிமன்றம் தான் பயன்படுத்தும் அதிகார வரம்பு மற்றும் அதிகாரம் ஆகியவை இந்தத் தீர்ப்பாயத்திற்கும் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்