TNPSC Thervupettagam

அட்லாண்டா நடவடிக்கை 2025

April 30 , 2025 17 hrs 0 min 12 0
  • EUNAVFOR ATALANTA (அட்லாண்டா நடவடிக்கை) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கடற்படை நடவடிக்கையாகும்.
  • இது Common Security and Defence Policy (CSDP) என்பதின் கீழ் நடத்தப்படுகிறது.
  • இது முதன்மையாக மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் இயங்குகிறது.
  • இது பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி மற்றும் ஏடன் வளைகுடா போன்ற முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
  • EUNAVFOR ஆனது, கடற்கொள்ளைச் சம்பவங்களுக்கு 48 முதல் 72 மணி நேரத்திற்குள் எதிர் நடவடிக்கை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.
  • மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் கடல்சார் மீதான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சியை மேற்கொள்வதற்கு இது முன்மொழிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்