TNPSC Thervupettagam

சோலிஸ்தான் கால்வாய் திட்டம் இடைநிறுத்தம்

April 30 , 2025 17 hrs 0 min 4 0
  • சிந்து மாகாணத்தில் பல வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் நாட்டின் அரசாங்கம் அதன் ஒரு இலட்சிய நோக்கமிக்க கால்வாய்கள் கட்டமைப்புத் திட்டத்தினை இடைநிறுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டமானது இதற்கு முன்னர் பயிரிடப்படாத மில்லியன் கணக்கான ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
  • கால்வாய்கள் கட்டமைப்புத் திட்டம் ஆனது, 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பெரிய பசுமை பாகிஸ்தான் முன்னெடுப்பின் மையக்கருவாகும்.
  • இது தெற்குப் பஞ்சாபில் உள்ள சோலிஸ்தானின் வறண்ட நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக 176 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் ஆகும்.
  • இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள சோலிஸ்தான் தார் பாலைவனத்தின் ஒரு பகுதியாகும்.
  • மிகவும் ஒரு அதிகாரப்பூர்வமாக, சோலிஸ்தான் கால்வாய் ஆனது சட்லெஜ் நதியில் இந்தியாவினால் திறந்து விடப்படும் வெள்ள நீரால் நீரைப் பெற இருந்தது.
  • 2018-19 ஆம் ஆண்டில், சிந்து மற்றும் அதன் ஐந்து துணை நதிகளிலிருந்து நாட்டிற்குக் கிடைத்த நீரில் சுமார் 3.4% மட்டுமே (4.9 மில்லியன் ஏக்கர் அடி) இந்திய அரசினால் கட்டுப்படுத்தப்படும் சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகிய மூன்று "கிழக்கு நதிகளில் இருந்து" பெறப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்