EUNAVFOR ATALANTA (அட்லாண்டா நடவடிக்கை) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கடற்படை நடவடிக்கையாகும்.
இது Common Security and Defence Policy (CSDP) என்பதின் கீழ் நடத்தப்படுகிறது.
இது முதன்மையாக மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் இயங்குகிறது.
இது பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி மற்றும் ஏடன் வளைகுடா போன்ற முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
EUNAVFOR ஆனது, கடற்கொள்ளைச் சம்பவங்களுக்கு 48 முதல் 72 மணி நேரத்திற்குள் எதிர் நடவடிக்கை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.
மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் கடல்சார் மீதான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சியை மேற்கொள்வதற்கு இது முன்மொழிந்துள்ளது.