TNPSC Thervupettagam

அண்டார்டிக் உயிரினங்கள் மீதான பருவநிலை மாற்ற விளைவு

April 12 , 2026 15 hrs 0 min 15 0
  • பருவநிலை மாற்றம் காரணமாக முக்கிய அண்டார்டிக் உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளதாக IUCN தனது செந்நிறப் பட்டியலைப் புதுப்பித்துள்ளது.
  • கடல் பனி உருகுவதால் 2080 ஆம் ஆண்டுகளில் எம்பரர் பென்குயின்களின் (ஆப்டெனோடைட்ஸ் ஃபோர்ஸ்டெரி) எண்ணிக்கை பாதியாக குறையும் என எதிர்பார்க்கப் படுவதால், அவை தற்போது அருகி வரும் இனம் என்ற நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • உணவு (க்ரில்/இறால் போன்ற கணுக்காலிகள்) கிடைப்பது குறைந்துள்ளதால், 2000 ஆம் ஆண்டிலிருந்து அண்டார்டிக் ஃபர் சீல்களின் (ஆர்க்டோசெஃபாலஸ் கசெல்லா) எண்ணிக்கை 50%க்கும் மேல் குறைந்துள்ளது, எனவே, அவையும் அருகி வரும் இனம் என்ற நிலையில் உள்ளன.
  • அதிக வீரியம் கொண்ட ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (HPAI) போன்ற நோய் பரவலால், மேற்கத்திய எலிஃபண்ட் சீல் (மிரூங்கா லியோனினா) தற்போது எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனம் என்ற நிலையில் உள்ளது.
  • கடல் பனி உருகுதல், பெருங்கடல் வெப்ப நிலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை இவற்றின் இனப்பெருக்கம், உணவு மற்றும் உயிர்வாழ்வை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.
  • பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் குறைக்கவும், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் அவசர உலகளாவிய நடவடிக்கை தேவை என்பதை இந்தச் செந்நிறப் பட்டியல் உணர்த்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்