TNPSC Thervupettagam

அதிகரிக்க உள்ள மாநிலங்களின் மூலதனச் செலவினம்

June 27 , 2025 8 days 57 0
  • 2025 ஆம் நிதியாண்டில் 8.7 டிரில்லியன் ரூபாயாக இருந்த 26 இந்திய மாநிலங்களின் மூலதனச் செலவினமானது, 2026 ஆம் நிதியாண்டில் சுமார் 10.2 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கும்.
  • இந்த மொத்த மூலதனச் செலவில் ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சுமார் 50% என்ற அளவில் அதன் பங்கினைக் கொண்டிருக்கும்.
  • மொத்த மூலதனச் செலவில் உத்தரப் பிரதேசம் மட்டும் 16.3% பங்கினைக் கொண்டு இருக்கும்.
  • 2025 ஆம் நிதியாண்டில், மிகவும் அதிகப் பங்கினை கொண்ட முதல் ஐந்து மாநிலங்கள் உத்தரப் பிரதேசம் (16.9%), மகாராஷ்டிரா (10.9%), குஜராத் (8.1%), மத்தியப் பிரதேசம் (7.5%) மற்றும் ஒடிசா (6.4%) ஆகியனவாகும்.
  • நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவை 2026 ஆம் நிதியாண்டில் மூலதனச் செலவினத்தில் 0.4% மட்டுமே பங்களிக்கும்.
  • 26 மாநிலங்களின் மொத்த வருவாய் ஆனது 2026 ஆம் நிதியாண்டில் சுமார் 69.4 டிரில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது 2025 ஆம் நிதியாண்டை விட 10.6% அதிகமாகும்.
  • வருவாய் வரவுகளானது 12.3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • மூலதன வரவானது 6.6% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் இராஜஸ்தான் ஆகியவை தலா 5.9% என்ற ஒரு அளவிற்குப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2025 ஆம் நிதியாண்டில் மிகவும் அதிகப் பங்களிப்பை வழங்கிய தமிழ்நாடு, 2026 ஆம் நிதியாண்டில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெறாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்