டார்க் ஈகிள் என்பது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஓர் மீயொலி எறிகணை அமைப்பு ஆகும்.
இது அமெரிக்க இராணுவத்தினால் பயன்படுத்தப்படும் அணுசக்தி சாராத, நிலப் பரப்பில் இருந்து ஏவப்படும் ஆயுதம் ஆகும்.
இந்த அமைப்பு ஆனது நீண்ட தூரத் தாக்குதல் வரம்பு கொண்ட அதி மீயொலி வேகத்திலான ஆயுதம் (LRHW) என்றும் அழைக்கப்படுகிறது.
இது 2,735 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இது ஓர் அதி மீயொலி வேகத்திலான இழைவியக்க ஆயுதத்தினை (Common Hypersonic Glide Body- C-HGB) பயன்படுத்துகிறது என்பதோடுஇது மேக் 17 வரையிலான வேகத்தில் பயணிக்கக் கூடியது.
இந்த எறிகணையானது திட எரிபொருள், இரண்டு-நிலை கொண்ட ராக்கெட் உந்திகளைப் பயன்படுத்தி ஏவப் படுகிறது.