அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ அங்கீகாரமான பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் அதற்கு பெயர் சூட்டி கௌரவித்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பெயர்களானது சூட்டப்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைக்கப்படவுள்ள போஸ் அவர்களுக்கான நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார்.
நேதாஜி அவர்களுக்காக நிறுவப்பட உள்ள இந்த நினைவிடமானது, 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு ராஸ் தீவு என்று அழைக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுகளில் அமைக்கப்பட உள்ளது.
இதில் பெயரிடப்படாத மிகப்பெரியத் தீவுகளுக்கு முதலாவது பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரானது வழங்கப்பட்டது.
இதில் இரண்டாவது பெரிய தீவிற்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற இரண்டாவது வீரரின் பெயரானது வழங்கப்பட்டது.
இந்த விருதினை முதன் முதலில் பெற்றவர் மேஜர் சோம்நாத் சர்மா ஆவார்.
1947 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் தேதியன்று ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே பாகிஸ்தானிய படையினர் மேற்கொண்ட ஊடுருவல்களுக்கு எதிராக போரிட்ட போது அவர் உயிர் இழந்தார்.