அமராவதி குவாண்டம் பள்ளத்தாக்கு – 4 கெல்வின் மைல்கல்
June 25 , 2026 6 days 62 0
அமராவதி குவாண்டம் பள்ளத்தாக்கு (AQV) ஆனது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்த்தல் குளிர்விப்பானைப் பயன்படுத்தி 4 கெல்வின் (-269°C) குளிரூட்டலை அடைந்து சாதனை படைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் உள்ள மேதா டவர்ஸில் உள்ள குவாண்டம் குறிப்பு அமைப்பில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
4 கெல்வின் என்பது மீக்கடத்தி சாதனங்கள், குவாண்டம் உணரிகள் மற்றும் குவாண்டம் கணினிக் கூறுகளைச் சோதிக்கப் பயன்படும் ஒரு கிரையோஜெனிக்/ கடுங்குளிர் முறை சார்ந்த வெப்பநிலையாகும்.
ஒரு நீர்த்தல் குளிர்விப்பான் ஆனது தனிச்சுழி வெப்பநிலைக்கு நெருக்கமான மிகக் குறைந்த வெப்பநிலையை அடைய ஹீலியம்-3 மற்றும் ஹீலியம்-4 ஐசோடோப்புகளைப் பயன்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியா தனது முதல் குவாண்டம் குறிப்பு வசதிகளை அமராவதி மேதா டவர்ஸ் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் AP ஆகிய இடங்களில் நிறுவியது.
தனிச்சுழி வெப்பநிலை என்பது 0 கெல்வின் (-273.15°C) ஆகும், இதுவே இயற்பியலில் சாத்தியமான மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.