TNPSC Thervupettagam

அமராவதி திட்டம் 2025 மறுதொடக்கம்

May 6 , 2025 15 days 66 0
  • இந்தியப் பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பசுமைத் தலைநகரான அமராவதியின் கட்டுமானப் பணிகளின் மறு தொடக்கம் உட்பட 58,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
  • 2014 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமராவதி புதிய தலைநகராக நியமிக்கப்பட்டது.
  • 'பிரஜா ராஜதானி' அல்லது "மக்களின் தலைநகரம்" என்று அழைக்கப்பட உள்ள அமராவதியானது, நிர்வாகத்திற்கான ஒரு கருப்பொருளுடன் கூடிய சுமார் ஒன்பது கருப்பொருள் சார் துணை நகரங்களைக் கொண்டிருக்கும்.
  • அமராவதியானது சூரிய, காற்று மற்றும் நீர்வளங்களில் இருந்து 2,700 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், உலகின் முதல் முழுமையாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இயங்கும் நகரமாக மாற உள்ளது.
  • அனைத்து அரசு வீடுகள் மற்றும் முக்கியக் கட்டிடங்களிலும் மேற்கூரை சூரிய சக்தி உற்பத்தி அமைப்புகள் நிறுவப்படும்.
  • மெட்ரோ இரயில் பாதைகள் மற்றும் மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பொது போக்குவரத்து வசதிகளும் தூய்மை ஆற்றலில் இயங்கும்.
  • மிகவும் அதிகளவு திறன்மிகு கட்டமைப்புகள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் IoT அடிப்படையிலான பல சேவைகள் அதன் உள்கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப் பட்டு உள்ளதுடன் அமராவதி சீர்மிகு நகரமாக கருத்தாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்