2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மணிப்பூரில் செயற்கைக்கோள் அலைபரப்பிகள் பொருத்தப்பட்ட அபாபாங் மற்றும் அலாங் எனப்படும் இரண்டு அமுர் பருந்து பறவைகள், வசந்த கால வலசையின் போது தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசியாவிற்கு திரும்புகின்றன.
சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) ஆதரவுடன், இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மணிப்பூர் வனத்துறை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
அமுர் பருந்து என்பது அரபிக் கடலைக் கடப்பது உட்பட சுமார் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 6,000 கி.மீ தூரம் பயணிக்கும் ஒரு நீண்ட தூர வலசை போகும் வேட்டையாடிப் பறவையாகும்.
இதன் இனப்பெருக்கத் தளங்கள் வடக்கு சீனா மற்றும் தூர-கிழக்கு ரஷ்யாவில் உள்ள அதே சமயம் குளிர்காலத்தை இவை கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கழிக்கின்றன.
IUCN செந்நிறப் பட்டியலில் இப்பறவையினம் "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது; மேலும் இது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.