அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருட்கள்
February 24 , 2023 862 days 386 0
வட அமெரிக்காவின் வானத்தில் பறந்த மூன்று மர்மப் பொருட்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இது 20,000 அடி (6,100 மீ) உயரத்தில் பயணித்ததால், அவை வணிக ரீதியாக இயக்கப் படும் விமானப் போக்குவரத்தில் குறுக்கிடக் கூடும்.
கடைசியாக சுடப்பட்ட பொருள் உருளை வடிவமும் 200 அடி உயரமும் கொண்டதாகும்.
இந்த வான்வழிப் பொருளின் தாங்கு பொருள் எடையானது 1000 பவுண்டுகளுக்கு மேல் இருந்தது.
முன்னதாக, அமெரிக்க விமானப்படையானது அதன் F-22 போர் விமானங்களைப் பயன்படுத்தி, தெற்கு கரோலினா கடற்கரைக்கு அருகில் சீனக் கண்காணிப்புப் பலூன் ஒன்றினைச் சுட்டு வீழ்த்தியது.
அடுத்த நாள் அது அலாஸ்கா பகுதியின் வான்வெளிக்கு அருகில் மற்றொரு வான் பொருளைச் சுட்டு வீழ்த்தியது.
மேலும், ஓர் அடையாளம் தெரியாத பொருள் வடக்கு கனடா பகுதி மீது சுட்டு வீழ்த்தப் பட்டது.
இந்த நான்காவது நிகழ்வானது ஹூரான் ஏரியின் மேல் நடத்தப்பட்டது.