45 நாள் நாடாளுமன்ற மதிப்பாய்விற்குப் பிறகு, அமெரிக்கா தனது பயங்கர வாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள் (SSOT) பட்டியலில் இருந்து சிரியாவை நீக்கி உள்ளது.
இஸ்ரேலை எதிர்க்கும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிரியா 1979 ஆம் ஆண்டு முதல் இப்பட்டியலில் இருந்து வந்தது.
எதிர்காலத்தில் சர்வதேச பயங்கரவாதத்திற்கு சிரியா ஆதரவளிக்காது என சிரிய அதிபர் அகமது அல்-ஷரா அளித்த உறுதியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது.
இந்த நீக்கமானது, அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நிதி அமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சிரியாவின் அணுகலை எளிதாக்கும் மற்றும் அதன் மறு சீரமைப்பிற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியா நீக்கப்பட்டதன் மூலம், கியூபா, ஈரான் மற்றும் வட கொரியா மட்டுமே அமெரிக்காவின் SSOT பட்டியலில் உள்ள நாடுகளாகும்.
ஈரான் 1984 ஆம் ஆண்டு முதலும், கியூபா 1982 ஆம் ஆண்டு முதலும் (2021 ஆம் ஆண்டில் மீண்டும் சேர்க்கப்பட்டது), மற்றும் வட கொரியா 2017 ஆம் ஆண்டு முதலும் (முன்னர் 2008 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டது) இப்பட்டியலில் உள்ளன.