அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திராகாந்தி பரிசு - 2018
December 1 , 2018 2419 days 764 0
சமீபத்தில் 2018-ம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசினை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது (CSE) பெற்றுள்ளது.
இது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் இந்திரா காந்தி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகிறது.
CSE (Centre for Science and Environment) ஆனது மறைந்த அனில் அகர்வாலின் தலைமையில் 1980-ல் நிறுவப்பட்டது.
இது காற்று மாசுபாடு, உணவுப் பாதுகாப்பு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு விவகாரங்களுக்காக பணியாற்றி வருகின்றது.