அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு வங்கிகள்
December 6 , 2025 6 days 49 0
2025 ஆம் ஆண்டிற்கான அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு வங்கிகள் (D-SIBs) பட்டியலில் SBI, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது.
இந்த மூன்று வங்கிகளும் முந்தைய ஆண்டைப் போலவே அதே D-SIB பிரிவுகளில் தொடர்கின்றன.
D-SIB கட்டமைப்பின்படி, 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் RBI இந்தப் பட்டியலை வெளியிட வேண்டும்.
SBI மற்றும் ICICI வங்கி முதன்முதலில் 2015–2016 ஆம் ஆண்டில் D-SIBs ஆக பெயரிடப் பட்டன என்பதோடு மேலும் HDFC வங்கி 2017 ஆம் ஆண்டில் இதில் சேர்க்கப்பட்டது.