TNPSC Thervupettagam

அரசு மருத்துவமனை சிகிச்சை மற்றும் தமிழ்நாடு

May 11 , 2026 4 days 124 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளின்படி, தென்னிந்திய மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் சுமார் 43% உள்நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
  • சுமார் 53.4% நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளையும், 3.6% பேர் அறக்கட்டளை மருத்துவமனைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
  • முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சராசரி சிகிச்சைச் செலவு ₹1,357 ஆகும்.
  • இந்தத் தொகை தேசிய சராசரி சிகிச்சைச் செலவான ₹6,631-ஐ விட மிகக் குறைவு.
  • தமிழ்நாட்டில் 99% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்