அருணாச்சலப் பிரதேசத்தில் சிறிய கொம்புத் தவளைகளின் ஐந்து புதிய இனங்களை இந்திய மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஐந்து இனங்களும் பொதுவாகச் சிறிய கொம்புத் தவளைகள் என்று அழைக்கப்படும் ஜிங்கோஃபிரிஸ் (Jingophrys) பேரினத்தைச் சேர்ந்தவை.
ஜிங்கோஃபிரிஸ் டானோகோகோ (Jingophrys tanogogo) என்பது இந்தியாவின் முதலாவது நத்தை உண்ணும் தவளையாகவும், மெகோஃப்ரிடே (Megophryidae) தவளைக் குடும்பத்தில் பதிவான முதலாவது நத்தை உண்ணும் இனமாகவும் உள்ளது.
ஜிங்கோஃபிரிஸ் டானிடாடி (Jingophrys taniitatii) ஜிரோ பள்ளத்தாக்கின் டானி பழங்குடியினரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
ஜிங்கோஃபிரிஸ் சியாங்கென்சிஸ் (Jingophrys siangensis) சியாங் பிராந்தியத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
ஜிங்கோஃபிரிஸ் ஹர்டி (Jingophrys hrdy) மற்றும் ஜிங்கோஃபிரிஸ் வுலர்சோனி (Jingophrys wularsoni) ஆகியவை மற்ற இரண்டு இனங்களாகும்.